மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

x

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இலுப்பக்குடி புது குடியிருப்பு பகுதியில் உள்ள தர்ம முனிஸ்வரர் பூச்செரிதல் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. கோயில் காளைக்கு வேஷ்டி துண்டு வழங்கி முதல் மரியாதை செய்த பின் வாடிவாசலில் இருந்து காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறி பாய்ந்து சென்ற காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று பிடிக்க முயன்றதை ஏராளமான மக்கள் கண்டு களித்தனர். இந்த மஞ்சுவிரட்டில் ஐந்து பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்