கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்
கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்
சிவகங்கை மாவட்டம் சதுர்வேதமங்கலம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயத்தில் நடைபெற்றது. இதில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 31 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரிய மாடுகளுக்கு 7 கிலோ மீட்டரும், சிறிய மாடுகளுக்கு 5 கிலோ மீட்டரும் என இரு பிரிவுகளில் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனை சாலையில் திரண்ட பொதுமக்கள் உற்சாகமாக கண்டு களித்தனர்.
வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Next Story
