கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பனங்குடி கிராமத்தில், குறுந்துடைய அய்யனார் கோயில் சந்தன காப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 23 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இரண்டு பிரிவுகளிலும் முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளருக்கு ரொக்கப் பரிசு உள்ளிட்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று பந்தயத்தை கண்டு ரசித்தனர்.
Next Story
