Bullet Train | சென்னையில் புல்லட் ரயில்... மத்திய அரசின் மெகா பிளான்
#chennai | #bullettrain | #unionbudget2026 சென்னையில் புல்லட் ரயில்... மத்திய அரசின் மெகா பிளான் "மாநில அரசு நிலம் கையகப்படுத்தி தராததால் ரயில் திட்டங்களில் தாமதம்" தமிழ்நாட்டில் மொத்தம் 35 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட்டுள்ளது என்றும், 95 சதவீத ரயில் தடங்கள் மின் மயமாக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். சென்னை - பெங்களூரு இடையேயான புல்லட் ரயில் 350 கிலோமீட்டர் வேகத்தில் 1.13 மணி நேரத்தில் பயணிக்கும் என்றும், சென்னை - ஐதராபாத் இடையேயான புல்லட் ரயில் 2.55 மணி நேரத்தில் பயணிக்கும் என்றும் கூறினார். அத்திப்பட்டு, மன்னார்குடி - பட்டுக்கோட்டை, தஞ்சை - மன்னார்குடி இடையேயான ரயில் தடங்களுக்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்தி தரவில்லை அஸ்வினி வைஷ்ணவ் குற்றம் சாட்டினார்.
