நடந்து சென்றவரை முட்டி தூக்கி வீசிய மாடு | செய்வதறியாது தவிக்கும் மனைவி
மாடு முட்டியதில் கூலி தொழிலாளி படுகாயம்
சென்னை திருவல்லிக்கேணியில் மாடு முட்டி கூலி தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் சென்னை திருவல்லிக்கேணி அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் பணி முடிந்து, வி.எம். சாலை வழியாக வீட்டிற்கு நடந்து சென்ற போது சாலையில் சுற்றி திரிந்த மாடு முட்டி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பேசிய அவரது மனைவி, மோகன்ராஜூக்கு தலையில் 6 தையல்கள் போடப்பட்டு இருப்பதாகவும், அன்றாடம் கூலி வேலைகளுக்கு மட்டுமே அவர் சென்று வந்ததாகவும் இதனால் செய்வதறியாது தவித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
Next Story
