விவசாயியை துரத்தி துரத்தி தாக்கிய காளை மாடு - அதிர்ச்சி வீடியோ
விவசாயியை துரத்தி துரத்தி தாக்கிய காளை மாடு - அதிர்ச்சி வீடியோ
Summary
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே விவசாயியை துரத்தி சென்ற காளை மாட்டின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
சிதம்பரம் காந்தி நகரைச் சேர்ந்த விவசாயி தனராஜன்.
இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தனராஜனை, தெருவில் நின்றிருந்த மாடுகள் திடீரென துரத்தி உள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.
ஆனால், பின்னால் தொடர்ந்து வந்த காளை மாடு ஒன்று அவரை கொம்பால் முட்டியும், காலால் உதைத்தும் கடுமையாக தாக்கியுள்ளது.
இதில் படுகாயமடைந்த தனராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள அப்பகுதி மக்கள், மாடுகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.
