சென்னையில் சாலையை மறித்த எருமை மாடுகள் - போலீசார், மக்கள் ஷாக்
சென்னையை அடுத்த குமணன்சாவடியில், எருமை மாடுகள் சாலையை மறித்து நின்றதும், அதைத் தொடர்ந்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. குமணன்சாவடியில் இருந்து மாங்காடு வரை ஆக்கிரமிப்புகளை அகற்றியதை கண்டித்து வியாபாரிகள் மறியலில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். அதற்காக, வியாபாரிகள் கூடியிருந்த நிலையில், அந்த வழியில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்ததால், சாலையில் வழக்கமாக செல்லும் எருமை மாடுகள் கூட்டமாக சுற்றின.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வியாபாரிகள் மறியலில் ஈடுபடுவதாக நினைத்து வந்த போலீசாருக்கு, எருமை மாடுகள் நிற்பது தெரிய வந்தது. இதையடுத்து தடுப்புகளை அகற்றி அனுப்பினர். அதே நேரத்தில், அங்கு இருந்த வியாபாரிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து போக வைத்தனர்.
Next Story
