காட்டெருமை வேட்டை - கேரளாவை சேர்ந்த ஒருவர் கைது
உதகை அருகே காட்டெருமையை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியதாக கேரளாவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கல்லக்கொரை கிராமத்தில் காட்டெருமை ஒன்று துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடப்பட்டிருந்தது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினரை கண்டு ஒரு கும்பல் தப்பி ஓடியது. இதில் கேரளா மாநிலம் வழிக்கடவை பகுதியை சேர்ந்த ரேஜி என்பவர் மட்டும் சிக்கினார். விசாரணையில், அந்த கும்பல் காட்டெருமையை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியது உறுதி செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ரேஜியிடம் இருந்து கத்தி, உபகரணங்கள், இரு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
