கிணற்றுக்குள் விழுந்த காட்டெருமை - 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

x

கொடைக்கானலில் கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டெருமையை 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் இணைந்து 4 மணிநேர போராட்டத்திற்குபின், பத்திரமாக மீட்டுள்ளனர். எம்எம்தெரு பகுதியில் உள்ள பாத்திமா குருசடி அருகே கிணற்றில் காட்டெருமை தவறி விழுந்ததாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். பனிமூட்டமும், சாரல் மழையும் செய்த பெரும் இடையூறுக்கு மத்தியில் ஜேசிபி, கிரேன் இயந்திரங்களை பயன்படுத்தி காட்டெருமை பத்திரமாக மீட்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்