மத்திய பட்ஜெட்... EPS கொடுத்த அதிரடி ரியாக்சன்... அழுத்தமாக சொன்ன வார்த்தை

x

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்கள் ஏதும் இல்லை என்றும், வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மாயாஜால அறிக்கையாக உள்ளது என்றும் அதிமுக பொதுச்செயலளார் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாய வளத்தை பெருக்க உதவும் நதி நீர் இணைப்பு திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்றும், ரயில்வே திட்டங்கள், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வருமான வரி விலக்கு மற்றும் சுங்க வரியில் மாற்றங்கள் செய்திருப்பது வரவற்புக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்