பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமனின் புடவை ரகசியம் - சுவாரஸ்ய பின்னணி

x

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மதுபானி கலை மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரி தேவியின் திறமையை போற்றும் வகையில், மதுபானி புடவை அணிந்து நாடாளுமன்றம் வந்திருந்தார். பீகார் மாநிலம் மதுபானிக்கு ஒரு நிகழ்வில் பங்கேற்க நிர்மலா சீதாராமன் சென்றபோது, துலாரி தேவியை சந்தித்து, மதுபானி கலை பற்றிய எண்ணங்களை பரிமாறிக்கொண்டார். துலாரி தேவி, புடவையை பரிசாக அளித்த நிலையில், பட்ஜெட் தினத்தில் அந்தப் புடவையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்து சிறப்பு சேர்த்தார். பீகாரில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்