

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு, முதலமைச்சர் பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிிக்கையில், ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும்
அரசின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். தனிநபர் வருமான வரி மாற்றி அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு பாராட்டு தெரிவித்த முதல்வர், சென்னை- பெங்களூரு விரைவு வழிச்சாலை திட்டத்தை வரவேற்றுள்ளார். திருச்சி- மதுரை- தூத்துக்குடி விமான நிலையங்களை விரிவாக்கம் செய்யவும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.