விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு எதிர்ப்பு : புத்தர் சிலை ஊர்வலம் நடத்திய பெரியார் அமைப்புகள்

சென்னையில் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் அமைப்புகள் நூதன போராட்டம் நடத்தின.
விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு எதிர்ப்பு : புத்தர் சிலை ஊர்வலம் நடத்திய பெரியார் அமைப்புகள்
Published on
சென்னையில் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் அமைப்புகள் நூதன போராட்டம் நடத்தின. விநாயகர் சிலை ஊர்வலகத்திற்கு மாற்றாக, திராவிடர் விடுதலை கழகம் சார்பில் புத்தர் ஊர்வலம் நடத்தப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்தால் பல இடங்களில் அமைதி குலைவதாக குற்றம்சாட்டிய அவர்கள், சமத்துவத்தை போதித்த புத்தர் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்றதாக தெரிவித்தனர். விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு எதிராக முழக்கமிட்டவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
X

Thanthi TV
www.thanthitv.com