தீப்பிடித்து எரிந்த BSNL அலுவலகம் - தி.மலையில் பரபரப்பு

x

மின்கசிவு காரணமாக பி.எஸ்.என்.எல் அலுவலம் தீப்பிடித்து எரிந்ததில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அலுவலக ஊழியர்கள் கொடுத்த தகவலின்படி விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். எனினும் ஏசி, கம்ப்யூட்டர், டிவி உள்ளிட்ட பல லட்சம் மதிப்புள்ள மின்னணு சாதனங்கள் தீயில் எரிந்து சேதமாகின. இருப்பினும் முக்கியமான தொலைத் தொடர்பு சாதனங்கள் பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்