கடித்ததில் மூக்கே மொத்தமாக பறிபோன கொடூரம்..சென்னையில் வளர்ப்பு நாய் அட்டூழியம்
சென்னை பூந்தமல்லி அருகே வளர்ப்பு நாய் ஒன்று கட்டுமான தொழிலாளியின் மூக்கை கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்சேரி பகுதியில் ஒருவர் சொந்தமாக வீடு கட்டி வருவதால் கட்டுமானப் பொருட்களை பாதுகாப்பதற்காக நான்கு நாய்களை வீட்டில் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நாய்களுக்கு உணவு வைக்க சென்ற கட்டுமான தொழிலாளி கணேஷின் மூக்கு மற்றும் கை, கால்களில் ராட்வீலர் நாய் கடித்து குதறியது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Next Story
