தாயைக் கடப்பாரையால் அடித்துக் கொன்ற கொடூர மகன் - தஞ்சாவூரில் பயங்கரம்

x

தஞ்சாவூரில் வீட்டை விட்டு வெளியேறிய தாய், திரும்பி வந்து சொத்தை எழுதிக் கேட்டதால் ஆத்திரமடைந்த மகன் தாயை கடப்பாரையால் அடித்துக் கொலை செய்திருக்கிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள ஆடுதுறை எஸ் எம் எஸ் நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் சில நாட்களுக்கு முன் இறந்து விட்ட நிலையில், அவரது முன்னால் மனைவியான பிருந்தா சொத்தை தனது பேரில் எழுதி வைக்க வேண்டுமென மன நலம் பாதிக்கபட்ட மகனிடம் தகராறு செய்திருக்கிறார். இதனால் ஏற்பட்ட மோதலில் பிருந்தாவை அவரது மகன் அருண்குமார் கடப்பாரையால் அடித்து கொலை செய்திருக்கிறார்.

சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீஸார் கொலை செய்த அருண்குமாரை கைது செய்திருக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்