சென்னா மசாலா கேட்டதற்கு கொடூரக் கொ*ல - தலைநகரிலேயே பயங்கரம் | Delhi

சென்னா மசாலா கேட்டதற்கு கொடூரக் கொ*ல - தலைநகரிலேயே பயங்கரம் | Delhi

சென்னா மசாலா கேட்டதற்கு கொடூரக் கொ*ல - தலைநகரிலேயே பயங்கரம் | Delhi | Channa Masala

#delhi #chennamasala #thanthitv

டெல்லியில் கூடுதலாக 'கொண்டைக்கடலை மசாலா' கேட்டதற்காக கொலை டெல்லியில், உணவு கடையில் கூடுதலாக கொண்டைக்கடலை மசாலா கேட்டதற்காக ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Pkg ​டெல்லி நிஹால் விஹார் பகுதியில், கார் ஓட்டுநரான சந்தீப் என்பவர், தனது குழந்தைகளுக்கு சாலையோர கடையில் உணவை பார்சல் வாங்கியபோது, மசாலா குறைவாக இருந்ததால் கடைகாரரிடம் கூடுதலாகக் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறவே, ஆத்திரமடைந்த கடை உரிமையாளர் சிந்து குப்தா, சந்தீப்பை 7 முறை கத்தியால் கொடூரமாக குத்தியுள்ளார். ​படுகாயமடைந்த சந்தீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த டெல்லி காவல்துறையினர், கடை உரிமையாளர் சிந்து குப்தாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

X