நாமக்கல்லில் பைனான்ஸ் அதிபர் கொடூர கொலை - Ex திமுக நிர்வாகி மீது பாய்ந்த குண்டாஸ்

x

திமுக முன்னாள் நிர்வாகி உள்பட நால்வர் மீது பாய்ந்த குண்டாஸ்!

நாமக்கல்லில் வாங்கிய கடனை திருப்பி தரவில்லை எனக்கூறி நிதி நிறுவன அதிபரை வெட்டி கொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட தி.மு.க., முன்னாள் நிர்வாகி உள்பட, 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் ஈச்சவாரி கிராமத்தை சேர்ந்த அருள்தாசை 4 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இந்த வழக்கில், ஆர்.புதுப்பாளையம் கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த திமுக முன்னாள் நிர்வாகி கார்த்திக், ரமேஷ்குமார், ராஜசேகரன், வீரக்குமார், என்.கார்த்திக், ஆகியோர் கைதாகினர்... அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கார்த்திக், ரமேஷ்குமார், கார்த்திக், ரமேஷ்குமார், ஆகிய நால்வரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, நாமக்கல் ஆட்சியர் துர்காமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்