Madurai | விவசாயி மீது கொடூரத் தாக்குதல் - நடவடிக்கை இல்லை எனப் புகார்

விவசாயி மீது கொடூரத் தாக்குதல் - நடவடிக்கை இல்லை எனப் புகார்

Madurai | விவசாயி மீது கொடூரத் தாக்குதல் - நடவடிக்கை இல்லை எனப் புகார் #madurai

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, பெட்ரோல் பங்கில் விவசாயியை ஆட்டோ ஓட்டுநர் கொடூரமாக தாக்கும் CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கீழமடையான் கிராமத்தைச் சேர்ந்த குமரன் மீது, ஆட்டோ ஓட்டுநர் முருகன் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த குமரன், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக கடந்த 27-ஆம் தேதி காடுபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், 14 நாட்களாக போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

X