"அண்ணே இது புதுசா இருக்குண்ணே" -ரூ.20 லட்சம் சிகரெட் பெட்டிகள் கொள்ளை''

x

சேலம் அரிசிபாளையத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த சிகரெட் பெட்டிகள் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரிசிபாளையத்தில் சிவபாலன் என்பவருக்கு சொந்தமான மொத்த விற்பனை கடை உள்ளது. இங்கு வழக்கம்போல் காலையில் கடையை திறக்க சென்ற ஊழியர்கள் கடை திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிகரெட் பெட்டிகள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள செவ்வாய்பேட்டை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்