அண்ணன் அரசியல் பிரவேசம் - உறுதி செய்த நடிகர் பிரபு

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் நாளை பாஜகவில் இணைய உள்ளார்.
அண்ணன் அரசியல் பிரவேசம் - உறுதி செய்த நடிகர் பிரபு
Published on

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் நாளை பாஜகவில் இணைய உள்ளார். இதுதொடர்பாக, நடிகர் பிரபு தந்தி டி.வி.க்கு அளித்த பிரத்யேக பேட்டியில், அண்ணன் இரண்டு மூன்று வருடங்களாக பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகராக உள்ளார் என்றும், அவருக்கு இப்போது தான் வாய்ப்பு கிடைத்துள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், அவருடைய அரசியல் பயணத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் எனவும், நானும் என் மகன் விக்ரம் பிரபுவும் அரசியலில் இல்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன் என நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com