முறிந்த கால் எலும்பு.. பெண்ணை கடலுக்குள் இழுத்து சென்ற அலை - திருச்செந்தூர் கடலில் அதிர்ச்சி
திருச்செந்தூர் கடலில் நீராடிய திருப்பூரை சேர்ந்த மீனாட்சி என்ற பெண்ணுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக அளவு ரத்தபோக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்த அவரை கடல் அலை கடலுக்குள் இழுத்து சென்றது.
உடனடியாக அங்கு வந்த கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சனிக்கிழமை அன்றும் இது போல் கடல் அலையில் சிக்கி 4 பேருக்கு கால் முறிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
