Flood | TN Rain | திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம் - செல்ல முடியாமல் தவிக்கும் மக்கள்

திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம் - செல்ல முடியாமல் தவிக்கும் மக்கள்

திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம் - வெளியே செல்ல முடியாமல் தவிக்கும் மக்கள்

#tnrain #rainfall #flood #thanthitv

கிருஷ்ணகிரி அருகே திடீர் வெள்ளப்பெருக்கால், கால்வாயின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், குடுகணஹள்ளி அடுத்த சவுட்டஹள்ளி கிராம மக்கள் சுமார் 8 லட்சம் ரூபாய் செலவில் கால்வாயின் குறுக்கே தற்காலிக தரைப்பாலம் அமைத்துப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாகப் பெய்த கனமழையால் கால்வாயில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், தற்காலிக பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், கிராம மக்கள் மட்டுமின்றி, 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் கிராமத்தை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com