சாலையில் ரத்தம் கசிந்தபடி கிடந்த கொத்தனார்.. மர்மத்தின் பின்னணியை அலசும் போலீஸ்
சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த காமலாபுரம் கிழக்கத்திக்காடு பகுதியை சேர்ந்த கண்ணப்பன் என்பவர் மர்மான முறையில் சாலையோரம் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகாத நிலையில், கொத்தனார் வேலைப்பார்த்து வந்த கண்ணப்பனை, எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், சேசியன்காடு பேருந்து நிறுத்தத்தில், பின்தலையில் ரத்தம் கசிந்தவாறு சடலமாக மீட்கப்பட்டார். அவரை யாரும் கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? உள்ளிட்ட கோணங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
