Bribery | Arrest | கலெக்டர் ஆபீஸில் லஞ்சம்.. கழிவறைக்குள் ஓடி ஒளிந்த அதிகாரி
லஞ்சம் பெற்றதாக கைது - கழிவறைக்குள் ஓடி ஒளிந்த அதிகாரி
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்றதாக ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் உட்பட மூன்று பேரை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்..
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒப்பந்ததாரர் ஒருவர் நில வரைபடம் பெறுவதற்காக சென்றுள்ளார். அவரிடம் 1.20 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற செயற்பொறியாளர் வீரசேகரன், உதவி பொறியாளர் நாகலிங்கம், அலுவலக உதவியாளர் அருண் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்..அப்போது செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதை பார்த்த செயற்பொறியாளர் கைக்குட்டையால் முகத்தை மறைத்துக் கொண்டு கழிவறைக்குள் ஓடிய சம்பவமும் அரங்கேறியுள்ளது..
Next Story
