லஞ்ச ஊழல் வழக்கு.. கோர்ட் படியேறிய அங்கித் திவாரி.. நீதிமன்றம் போட்ட உத்தரவு

திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்ட மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரி தற்போது நிபந்தனை ஜாமினில் உள்ளார். இவர் வாரம் ஒரு முறை திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகும் நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்த போது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கால அவாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதி வழக்கை ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com