லட்சத்தில் லஞ்சம்..? கையும் களவுமாக சிக்கிய அதிகாரி... சேலத்தில் பரபரப்பு

x

சேலத்தில் அரசு பள்ளி பணிகளுக்கு ஒப்பந்தம் ஒதுக்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக பொதுப்பணித்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் அதே பகுதியில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் எலக்ட்ரானிக்ஸ் பணிக்கு ஒப்பந்தம் கோரியிருந்தார். இதற்கு சேலம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் முதுநிலை வரைவு தொழில் அலுவலரான ரவி, ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.. இது குறித்து சண்முகம் அளித்த புகாரின் பேரில், ரவி மற்றும் காண்ட்ராக்டர் பிரகாசை லஞ்ச ஒழிப்பு துறையினர் பணம் பெறும் போது கையும் களவுமாக கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்