BREAKING || ரூ.2 கோடி சொத்துக்கள் முடக்கம் - அதிரடி நடவடிக்கை

x

போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய நபர்களின் 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்.

செங்குன்றம் அருகே கடந்த ஜூன் மாதம் சென்னை போதை பொருள் கட்டுப்பாட்டு பிரிவு இயக்குநர் அரவிந்தன் தலைமையிலான அதிகாரிகள் மெத்தபெட்டமைன் வைத்திருந்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 1.47 கிலோ மெத்தபெட்டமைன் போதை பொருள் கைப்பற்றப்பட்டன.

அவர்களிடமிருந்து 1 கோடியே 29 லட்சம் ரொக்க பணம்,3000 அமெரிக்க டாலர்,5000 ஶ்ரீலங்கா பணம் உள்ளிட்ட ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கில் தொடர்புடைய நிசாருதீன், ரஃபியா சஹானா என்பவர்களின் 2 கோடி ரூபாய் மதிப்பிலான 4 விவசாய நிலங்கள்,11 வீடுகள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் போதை பொருள் விற்பனை மூலமாக சம்பாதிக்கப்பட்டது என கண்டறியப்பட்டு மத்திய போதை பொருள் கட்டுப்பாட்டு மையம் சார்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து இது போன்று போதை பொருள் விற்பனையாளர்கள் சொத்துக்கள் முடக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்