Diwali Special | சபாஷ் சரியான போட்டி...கணவர்களை தூக்கி ஓடிய மனைவிகள் -ஊரே கொண்டாடிய தீபாவளி திருவிழா
#sivagangai | #diwalispecial சபாஷ் சரியான போட்டி... கணவர்களை துக்கி ஓடிய மனைவிகள் - ஊரே கொண்டாடிய தீபாவளி திருவிழா சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே, தீபாவளியை முன்னிட்டு நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் கிராம மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தின. படமிஞ்சி கிராமத்தில் பைந்தமிழ் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் 21-வது ஆண்டாக இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கணவரைத் தென்னை மட்டையில் அமர வைத்து இழுத்துச் செல்லுதல், தோளில் சுமந்து ஓடுதல், வாயால் முறுக்கு சாப்பிடுதல், பலூன் ஓட்டம், பானை உடைத்தல் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்காக தலையிலும் இடுப்பிலும் குடங்களைச் சுமந்து ஓடும் போட்டியும் நடைபெற்றது. மறைந்து வரும் கிராமிய பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கிராம மக்கள் ஆரவாரத்துடன் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
