விபத்தில் மூளை சாவு அடைந்த இளைஞர் உடல் உறுப்புகளை தானம் செய்த உறவினர்கள்

பரமக்குடியில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
விபத்தில் மூளை சாவு அடைந்த இளைஞர் உடல் உறுப்புகளை தானம் செய்த உறவினர்கள்
Published on
பரமக்குடியில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காந்திநகரை சேர்ந்த 21 வயது இளைஞர் சரத்குமார், வேலைக்காக சிவகங்கை சென்றுவிட்டுதிரும்பிய போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சரத்குமார், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் அவரது பெற்றோர்கள் சம்ம‌த‌த்துடன் 7 நபர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து சரத்குமாரின் வேண்டுகோள் அனைவரும் தலைக்கவசம் அணிந்து பைக் ஓட்டுங்கள் என கூறி அவரது நண்பர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com