தனியார் விடுதியில் காதலியை கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை
சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த காதல் ஜோடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமாபுரத்தைச் சேர்ந்த பாரதி பெருமாள் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த பவ்யா ஆகிய இருவரும் விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.
காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், விடுதி ஊழியர்கள் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது பாரதி பெருமாள் தூக்கில் தொங்குவதைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்றபோது, பவ்யா ரத்த காயங்களுடன் சடலமாகக் கிடந்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், பவ்யாவை கத்தியால் வெட்டியும், தலையணையால் முகத்தை அழுத்தியும் பாரதி பெருமாள் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் பாரதி பெருமாள் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது உறுதியாகியுள்ளது.
இருவரது உடல்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
