செல் போனில் மெசேஜ் மூலம் காதலி திட்டியதால் காதலன் தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே,
காதலி செல்போனில் மெசேஜ் மூலம் திட்டியதால் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பாப்பான்விடுதி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் மனோஜ்குமார், அதே ஊரைச் சேர்ந்த பாலதர்ஷினி என்பவரை, கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. செல்போனில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டபோது பாலதர்ஷினி திட்டி மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கறம்பக்குடி தாலுகா அலுவலகம் அருகே உள்ள கருவை மரத்தில், வேட்டியால் தூக்கிட்டு மனோஜ்குமார் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதனால் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சோகமடைந்தனர்.
Next Story
