காதலி பேசாததால் காதலன் தூக்கிட்டு தற்கொலை

x

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில், காதலி பேசாததால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்தவர் சரவணன், இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதே பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த பெண் அவருடன் பேசாமல் இருந்ததால், மன உளைச்சலில் இருந்த சரவணன், தனது வீட்டுக்கு அருகிலுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்