காதலிக்க வற்புறுத்தி சிறுவன் மிரட்டல் - சிறுமி தற்கொலை
சேலம் மாவட்டம் சன்னியாசிகுண்டு பகுதியில், காதலிக்க வற்புறுத்தி சிறுவன் மிரட்டல் விடுத்ததால் 14 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து வந்த கிச்சிப்பாளையம் போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தன்னை காதலிக்கவில்லை என்றால் இறந்துவிடுவேன் என மிரட்டி சிறுவன் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், இதை பார்த்து அச்சம் அடைந்த சிறுமி, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story
