விநாயகர் ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து சிறுவனின் விரல் துண்டானது

விநாயகர் ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து சிறுவனின் விரல் துண்டானது

#vinayagarchathurthi #vinayagarrally

விநாயகர் ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து சிறுவனின் விரல் துண்டானது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே விநாயகர் ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில், 4-ம் வகுப்பு மாணவனின் கை விரல் துண்டானது. எல்லைகிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன், சாலையோரம் நின்று விநாயகர் ஊர்வலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு ஒன்று சிறுவனின் கையில் விழுந்து வெடித்ததில், அவரது ஒரு விரல் துண்டாகி படுகாயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுவனை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com