பெற்றோர் கண்டித்ததால் மாடியில் இருந்து குதித்த சிறுவன்
பெற்றோர் கண்டித்ததால் மாடியில் இருந்து குதித்த சிறுவன்
பள்ளி முடிவதற்கு முன்பாக வீட்டிற்கு வந்ததை பெற்றோர் கண்டித்ததால் 5 வது மாடியில் இருந்து குதித்த 8 ஆம் வகுப்பு மாணவன். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.
சென்னை மண்ணடி பகுதியைச் சேர்ந்தவர் ஜாவித் அகமது. இவரது மகன் இப்ராஹிம் (13). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளிக்கு சென்று விட்டு உணவுக்காக வீட்டிற்கு வந்தார்.
அப்போது பெற்றோர், ஏன் வீட்டிற்கு வந்தாய், பள்ளி முடிவதற்குள் ஏன் வந்தாய் என கண்டித்ததாக தெரிகிறது. பள்ளி இல்லை என கூறியதும் பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். பள்ளி முடியவில்லை என்பதும் பள்ளியில் தெரிவிக்காமலேயே வீட்டிற்கு வந்ததும் தெரிந்தது. மேலும் இப்ராஹிமை கண்டித்ததால் மனை உடைந்து வீட்டின் 5 வது மாடியில் திடீரென குதித்தார்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து வடக்கு கடற்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
