உள்ளே உயிருக்கு போராடிய சிறுவன்.. ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் சென்ற பைக்கால் அதிர்ச்சி
கேரளாவில், உயிருக்கு போராடிய சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் குளத்தில் விழுந்து மூழ்கிய எட்டு வயது சிறுவனை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் கொண்டு சென்றனர். அப்போது,
முன்னால் சென்ற இரு சக்கர வாகனம், ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் இரண்டு கிலோ மீட்டர் வரை சென்றது.
உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க முடியாததால் சிறுவனுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
