மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி - அதிர்ச்சி காட்சிகள் வெளியீடு/

x

மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

சென்னை திருவெற்றியூர் தாங்கள் பீர் பயில்வான் சாலையில் நேற்று முன்தினம் இரவு டியூஷன் முடித்துவிட்டு வீடு திரும்பிய பனிரெண்டாம் வகுப்பு மாணவனான நஃபேல் தேங்கி நின்ற மழைநீர் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்

இதற்கு மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியப் போக்க காரணம் என்று அந்த பகுதியை சேர்ந்த பகுதி வாசிகள் மற்றும் உறவினர்கள் அன்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்

அதைத் தொடர்ந்து நேற்று காலை மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவெற்றியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்

காவல்துறையினர் மற்றும் திருவெற்றியூர் எம்எல்ஏ கே பி சங்கர் மண்டல குழு தலைவர் தனியரசு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை அவரது உடலை அடக்கம் செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்