துடிதுடித்து உயிரிழந்த சிறுவன் | வெளியான அதிர்ச்சி காரணம்

x

பூச்சி கடித்து சிறுவன் உயிரிழப்பு - விசாரணை

வேலூரில் அருகம்புல் வெட்ட தோட்டத்திற்கு சென்ற போது பூச்சி கடித்ததில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. வேலூர் மாவட்டம் விருபாட்சிபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் சஞ்சய், விநாயகர் சதுர்த்திக்கு அருகம்புல் வெட்ட தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த அடையாளம் தெரியாத பூச்சி கடிக்கவே, சிறுவன் வலியில் துடித்ததால், பெற்றோர் அவரை, வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சிறுவன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்