காளையின் கயிற்றில் சிக்கி படுகாயமடைந்த சிறுவன் உயிரிழப்பு

காளையின் கயிற்றில் சிக்கி படுகாயமடைந்த சிறுவன் உயிரிழப்பு
Published on

வாணியம்பாடி அருகே எருது விடும் விழாவை காண சென்று காளையின் கயிற்றில் சிக்கி படுகாயமடைந்த 11 வயது சிறுவன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். கடந்த 7-ம் தேதி, புல்லூர் பகுதியில் நடைபெற்ற எருது விடும் விழாவை காணச்சென்ற போது சீமுகம்பட்டு பகுதியை சேர்ந்த சிறுவன் படுகாயமடைந்தான். இந்நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

X

Thanthi TV
www.thanthitv.com