பூத் கமிட்டி கூட்டம் - கீழே விழுந்த ஆனந்த் பதறிய விஜய்

x

கோவையில், தவெக பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டது. கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் பங்கேற்ற நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தங்களை கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்காததால் பாதுகாவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற ஆனந்த், நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்