பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பின்னணியில் சர்வதேச 'கை' பறந்த அழைப்பு... உள்ளே வரும் இண்டர்போல்..!

சென்னையில் 13 தனியாா் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார், தகவல் தொழில்நுட்பச் சட்டம், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இவ்வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை அடுத்து, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், புரோட்டான் என்ற மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் வெளிநாட்டு நெட்வொர்க்கை பயன்படுத்தியுள்ளதால் அவரை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் சைபர் கிரைம் போலீசார், மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் இன்டர்போல் உதவியை நாடியுள்ளனர். அவர்கள் இன்று மாலைக்குள் தரும் தகவலை அடுத்து, மர்ம நபர் குறித்து தெரியவரும் என கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com