முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின், சென்னை மற்றும் சேலம் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர், அவசர எண்ணிற்குத் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின், சென்னை மற்றும் சேலம் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர், அவசர எண்ணிற்குத் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நெடுஞ்சாலை நகர் முழுவதும் உள்ள சாலைகள், முதல்வர் வீடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஒரு மணி நேரமாக வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் அந்த மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது. இந்த வெடிகுண்டு சோதனையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து, இன்று முதல்வரின் வருகையையொட்டி முதல்வர் வீட்டின் முன்பாக பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com