சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - மோப்ப நாயுடன் இறங்கிய போலீசார்
சென்னையில் தொடரும் இமெயில் வெடிகுண்டு மிரட்டல்கள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பள்ளிகள், அண்ணா பல்கலைக்கழகம், விமான நிலையத்தை தொடர்ந்து தற்போது உயர்நீதிமன்றத்திற்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தலைமை பதிவாளருக்கு வந்த இமெயில் மிரட்டலை அடுத்து நீதிமன்றம் வளாகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். இதனால், சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. இமெயில் மூலம் மிரட்டல் விடும் டார்க் நெட் குற்றவாளிகளை பிடிக்க சென்னை மத்திய சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Next Story