

157 ஆண்டு கால பாரம்பரிய சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, கடந்த இரு தினங்களுக்கு முன் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. அதை தொடர்ந்து, நடந்த உயர்நீதிமன்ற பாதுகாப்பு குழு கூட்டத்தில், பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் 7 வாயில்களிலும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கமாண்டோ வீரர்களும் நுழைவு வாயில்களில் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வாகன நிறுத்தப்பட்ட பிறகே சோதனை நடத்தப்படுகிறது. வழக்கறிஞர்களின் அடையாள அட்டைகளை காண்பித்த பிறகே நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.