தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - மோப்ப நாய் உதவியுடன் சோதனை

சென்னை தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - மோப்ப நாய் உதவியுடன் சோதனை
Published on

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 23ம்தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தேர்தலுக்கான காவல் துறை இயக்குனர் அசுதோஷ் சுக்லா ஆகியோர் தலைமையில் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட காவல் ஆணையர்கள், மற்றும் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டம் நடைபெற்ற சமயத்தில், தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகுக்கு வந்த மர்ம கடிதம் ஒன்றில் தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தலைமை செயலகத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com