DMK | Theft | திமுக பிரமுகர் வீட்டிலேயே துணிகர சம்பவம்

திமுக பிரமுகர் வீட்டிலேயே துணிகர சம்பவம்

#dmk #theft திருவாரூர் அருகே திமுக பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... குன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார்... திமுக ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளராக செயல்பட்டு வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய பொழுது வீட்டின் முன்பக்க கதவை உடைந்திருந்துள்ளது. தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 13 சவரன் தங்க நகை அரை கிலோ வெள்ளி 22 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை திருடுபோய் இருந்தது தெரியவந்தது. கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவாரூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com