"அதிக புகை வரும் பொருட்களை எரிக்காதீர்கள்" - விமான நிலைய ஆணையம் வேண்டுகோள்

விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக புகை தரும் கழிவு பொருட்களை எரிக்க வேண்டாம் என விமான நிலைய ஆணையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
"அதிக புகை வரும் பொருட்களை எரிக்காதீர்கள்" - விமான நிலைய ஆணையம் வேண்டுகோள்
Published on
விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக புகை தரும் கழிவு பொருட்களை எரிக்க வேண்டாம் என விமான நிலைய ஆணையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. வருகிற 14ஆம் தேதி போகி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை விமான நிலைய ஆணையகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு போகி பண்டிகையின் போது, 73 விமானங்கள் புறப்படுவதிலும், 45 விமானங்கள் தரையிறங்குவதிலும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதனால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனவே, இந்த ஆண்டு விமான சேவை பாதிப்பின்றி செயல்பட, மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், சென்னை விமான நிலைய ஆணையகம் அறிக்கை வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com