2 நாள் தீவிரமாக தேடி தாமிரபரணியில் சடலமாக மீட்பு - நெல்லையில் அதிர்ச்சி..
Nellai Death | 2 நாள் தீவிரமாக தேடி தாமிரபரணியில் சடலமாக மீட்பு - நெல்லையில் அதிர்ச்சி..
நெல்லை வண்ணாரப்பேட்டை தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்ற ஒருவர் மாயமானதாக பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்தவர்கள் தாமிரபரணி ஆற்றில் தீவிரமாக தேடி வந்தனர் மேலும் சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டனர் இருசக்கர வாகனம் ஒன்று கேட்பாரற்ற நிலையில் வண்ணாரப்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்ததை தொடர்ந்து ஆற்றில் குளிக்க சென்ற நபர் யார் என்பது தொடர்பான விசாரணையின் தீவிர படுத்தப்பட்ட து சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நேற்று மாலையில் தேடிய நிலையில் இரவு நேரம் ஆனதால் தேடுதல் பணியை கைவிட்ட தீயணைப்புத் துறையினர் இன்றைய தினம் காலைலும் மீண்டும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர் உக்கிரகுளம் வண்ணாரப்பேட்டை பகுதியில் மாயமான நபர் தொடர்பாக தீவிரமாக தேடப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் தாமிரபரணி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது தொடர்ந்து அவர் யார் என்பது குறித்த விசாரணையை பாளையங்கோட்டை போலீசார் மேற்கொண்ட நிலையில் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த மாடசாமி என்பது தெரிய வந்தது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக நிலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தொடர்ந்து வண்ணாரப்பேட்டை பகுதியில் குளிக்க செல்லும் நபர் உயிரிழந்து வருவதை கருத்தில் கொண்டு அப்பகுதியில் அபாய எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது
