கொலை செய்யப்பட்ட ரவுடி ஜானின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கொலை செய்யப்பட்ட ரவுடி ஜானின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
Published on

ஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சேலத்தை சேர்ந்த ரவுடி ஜான் வெட்டி கொல்லப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது‌. அப்போது அமரர் ஊர்தி வாகனத்தில் கூடுதலான நபர்கள் ஏற முயன்றதால் சிலரை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து அப்புறப்படுத்தியதால் அங்கு லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜான் கொலை வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டு பேர் சரணடைந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com